Plane | தமிழகத்தில் NH ரோட்டில் தரையிறங்கிய விமானம் - பார்ட் பார்ட்டாக கழட்டப்படும் காட்சி
புதுக்கோட்டை அருகே விமானம் சாலையில் தரையிறங்கிய சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சிக்காக திருச்சி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாரத விதமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கவனித்த விமானி திருச்சி விமான நிலைய அதிகாரிகளின் அனுமதியுடன் அம்மாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
இந்திய விமான போக்குவரத்து ஆணைய இயக்குநர் ஜெனரல் மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
Next Story
