பிங்க் மாரத்தான் 2.0-பெண்களுக்கான விழிப்புணர்வு ஓட்டம்

பிங்க் மாரத்தான் 2.0-பெண்களுக்கான விழிப்புணர்வு ஓட்டம்

கோபிச்செட்டிப்பாளையத்தில் ‘பிங்க் மாரத்தான் 2.0'’ என்ற பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஈரோடு சட்டக்கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரி சார்பில் கோபிச்செட்டிப்பாளையத்தில் ‘பிங்க் மாரத்தான் 2.0'’ என்ற பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட கூடுதல் பயிற்சி ஆட்சியர் கஞ்சன் சவுத்ரி தலைமையில் போட்டியாளர்கள் முன் ஆயத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். பின்னர் மாரத்தான் ஜோதி துணை ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டு பிங்க் மாரத்தான் தொடங்கப்பட்டது...

19 முதல் 35 வயது வரையிலானவர்களுக்கு 8 கிலோ மீட்டர் மற்றும் 4 கிலோ மீட்டர் பிரிவுகளாக போட்டி நடைபெற்றது... ஈரோடு கூடுதல் பயிற்சி ஆட்சியர் கஞ்சன் சவுத்ரி, 8 கி.மீ பிரிவில் போட்டியாளர்களுடன் இணைந்து ஓடி மாரத்தானை நிறைவு செய்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், முழுமையாக ஓடி நிறைவு செய்தவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் அன்புசெல்வி, கோபிச்செட்டிப்பாளையம் நீதித்துறை நடுவர் ருத்ர வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் பாரதி வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் சகுந்தலா வெங்கிடுசாமி, தொழிலதிபர் விஜயலட்சுமி பழனிநாதன், நம்ம கோபி பவுண்டேஷன் சமூக ஆர்வலர் அஸ்வதி அனூப், ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரி முதல்வர் விமலா ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com