Keezhadi Excavation| கீழடியில் குவியல் குவியலாக கிடைத்த புதிய ஆதாரங்கள்..
கீழடியில் குவியல் குவியலாக கிடைத்த புதிய ஆதாரங்கள்.. இதுக்கு மேல இந்த உலகத்துக்கு என்ன வேணும் கீழடி 11ஆம் கட்ட அகழாய்வில் குவியல் குவியலாக சாயக் கிண்ணங்கள் கிடைத்திருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் ஏராளமான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே கீழடி அகழாய்வில் உறைகிணறு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது புதிதாக தோண்டப்பட்ட குழியிலும் நான்கு அடுக்குகளைக் கொண்ட மேலும் ஒரு உறைகிணறு ஒன்று வெளிப்பட்டுள்ளது. இந்த உறைகிணற்றை சுற்றியுள்ள பகுதியில் சாயக் கிண்ணங்கள், பானை ஓடுகள் மற்றும் சேதமடைந்த பானைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த சாயக் கிண்ணங்கள், சாயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தொல்லியல்துறை ஆய்வுகளின் முடிவில் இந்த சாயக் கிண்ணங்களின் பயன்பாடு மற்றும் அவை சார்ந்த தொழில்நுட்பம் குறித்து மேலும் முக்கிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
