விஷம் கலந்த அரிசி சாப்பிட்ட புறாக்கள் உயிரிழப்பு-போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விஷம் கலந்த அரிசியை போட்டு நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்களை கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராங்கன்னி ஏரிக்கரை பின்பகுதியில் துரைராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் அருகில் வீடு கட்டி புறா, கோழிப்பண்ணை அமைத்து பராமரித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பண்ணையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் விஷம் கலந்த அரிசியை மர்ம நபர்கள் வயல் பகுதியில் வீசியதே புறாக்கள் இறப்புக்கு காரணம் என்பது தெரிய வந்தது, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
