சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள ஆதம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். திருநீர்மலை நாகல் கேணி சாலையில் பன்றி இறைச்சி கடை நடத்தி வரும் இவரை நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று வீட்டின் அருகிலேயே இரும்பு கம்பியால் அடித்து கொன்றது. இந்த திடீர் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த சங்கர்நகர் போலீசார், சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம்பக்கத்தினரிடையே விசாரித்ததில், சீனிவாசன், பன்றி உரிமையாளர்களுக்கு தெரியாமல், பன்றிகளை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, திருநீர்மலை, நாகல்கேணி பகுதிகளில் பன்றி வளர்ப்பவர்களிடம் போலீசார் தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.