மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் திட்டம்: '6 மாதமாகியும் செயல்பாட்டுக்கு வராத திட்டம்'

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி நிதிகள் மூலம் மாற்றுதிறனாளி பயனாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் திட்டம்: '6 மாதமாகியும் செயல்பாட்டுக்கு வராத திட்டம்'
Published on
நெல்லை மாவட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதி மற்றும் பொது நிதிகளில் இருந்து மாற்றுதிறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனங்கள் வழங்க திட்டமிடப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தி 13 மாற்றுதிறனாளிகள் பெயரில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வரை பயனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்படாமல் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வாகன ஷோரூமில் வெயிலிலும், மழையிலும் நிற்பது மாற்றுதிறனாளிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரம் ஒதுக்காததால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது மாற்றுதிறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com