

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் உடல் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் இருந்து பி.எச். பாண்டியனின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேவாலயத்தில் வைத்து சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, பொன்னையன், சைதை துரைசாமி உள்ளிட்டோரும் மற்றும் ஏராளமான அதிமுகவினரும் கலந்து கொண்டனர்.