கொடூரனின் புகைப்படம், புதிய வீடியோ வெளியீடு... போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் களமிறங்கியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரவு பகலாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்போன் டவரில் பதிவான அலைபேசி எண்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்கள் என பல கோணங்களில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் இணைந்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
குற்றவாளியின் புகைப்படத்தையும், புதிய வீடியோ காட்சியையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
Next Story
