மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை - ஒருவர் கைது

சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை - ஒருவர் கைது
Published on
அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்த தமிழ்ச்செல்வன் தான் கொல்லப்பட்டவர் ஆவார். இன்று காலை அவரை பார்க்க வந்த அருண்குமார் என்ற இளைஞர், தனது தாயுடன் பழகக் கூடாது என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இருவரிடையே நடந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருந்தாளுரை ஓட ஓட விரட்டி குத்திக் கொன்றார். தப்ப முயன்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் ஒரு அறையில் அடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அருண்குமாரை கைது செய்து அழைத்து சென்றனர். மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த அரசு மருத்துவமனையில், ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நோயாளிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.
X

Thanthi TV
www.thanthitv.com