பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்பட்ட விவகாரம் : பாஜக அரசு நாடகமாடுவதாக திருமாவளவன் புகார்

பெட்ரோல் டீசல் விலையில் இரண்டரை ரூபாய் குறைத்திருப்பது, கண் துடைப்பு நாடகம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்பட்ட விவகாரம் : பாஜக அரசு நாடகமாடுவதாக திருமாவளவன் புகார்
Published on
பெட்ரோல் டீசல் விலையில் இரண்டரை ரூபாய் குறைத்திருப்பது, கண் துடைப்பு நாடகம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலால் வரியில் இருந்து ஒன்றரை ரூபாய் குறைத்து, மீதமுள்ள ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கூறுவது, மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு நாடகம் என குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசு கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு முன் வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com