Petrolshortage |தமிழகம் முழுக்க தலைகீழான நிலை. பெட்ரோல் தட்டுப்பாடு? - ஸ்தம்பித்த பெட்ரோல் பங்க்-கள்

தமிழகம் முழுக்க தலைகீழான நிலை. பெட்ரோல் தட்டுப்பாடு? - ஸ்தம்பித்த பெட்ரோல் பங்க்-கள்

தமிழகம் முழுக்க தலைகீழான நிலை.. பெட்ரோல் தட்டுப்பாடு? - ஸ்தம்பித்த பெட்ரோல் பங்க்-கள் #TamilNadu #Petrolshortage #thanthitv பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம்-பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் அதிகளவில் குவிந்தனர். மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் 300 ரூபாய் வரை விற்கப்படலாம் என்கிற வதந்தி பரவியதாலும், சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com