Petrol | Cuddalore | பெட்ரோல் தட்டுப்பாடு.. மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள்

Petrol | Cuddalore | பெட்ரோல் தட்டுப்பாடு.. மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள்

Petrol | Cuddalore | பெட்ரோல் தட்டுப்பாடு.. மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓமக்குளம், வல்லம்படுகை உள்ளிட்ட பகுதிகளில் சில பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெட்ரோல் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கூலி தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக பயணிக்கும் பொதுமக்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பெட்ரோல் தட்டுப்பாட்டை சரிசெய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com