பெட்ரோல் போடுவது போல் வந்து பணப் பையை திருடி சென்ற 3 பேர்

கடலூரில் பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி விட்டு பணப்பையை பறித்து சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல் போடுவது போல் வந்து பணப் பையை திருடி சென்ற 3 பேர்
Published on

புதுசத்திரம் காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், பெட்ரோல் போட்டனர். பின்னர் திடீரெனஊழியர் சிவசங்கரனை வெட்டிய அவர்கள்,பணப்பையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த சிவசங்கரன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் விசாரணை செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற 3 கொள்ளையர்களை பிடிக்க கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com