நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு | வெளியான அதிர்ச்சி சிசிடிவி
நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு - சிசிடிவி வெளியீடு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஓய்வுபெற்ற எல்.ஐ.சி ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடப்பாலம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது வீட்டிற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர்.
இதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், கேட் பூட்டியிருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன், வெடி வெடித்து பிறந்தநாள் கொண்டாடிய சிலரை ரவிச்சந்திரன் கண்டித்தது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அம்பாசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
