திருவள்ளூர் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வழக்கு : "இரண்டு பேருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை"

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வழக்கில், இரண்டு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வழக்கு : "இரண்டு பேருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை"
Published on
திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வழக்கில், இரண்டு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் மாதம், அத்துப்பேடு கிராமத்திலுள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு பைக்கில் வந்த 3 பேர், பங்க் ஊழியர்களை சரமரியாக அரிவாளால் வெட்டி விட்டு, ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில், தொடர்புடைய எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com