பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயற்சி - 2 பேர் படுகாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் அருகே விஜயகணபதி, தமிழரசன் என்ற 2 இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், இளைஞர்கள் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்து தப்பியோடியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
