டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரம்;மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் சார்பில் அவரது வழக்கறிஞர் முறையிட்டார்.வழிபாட்டுத்தலங்கள் வழிபட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மதுபான கடைகளுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாதிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது, அதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யவும், நாளை விசாரணைக்கு ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
