சிறுவர்களை விரட்டி விரட்டி கடித்த வளர்ப்பு நாய்கள்.. தட்டி கேட்டவரை சரமாரி தாக்கிய ஓனர் - அதிர்ச்சி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, சிறுவர்களை வளர்ப்பு நாய்கள் துரத்தி கடித்ததால், எதிர்த்து கேள்வி கேட்ட நபரை உரிமையாளர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டம்பட்டி பகுதியில் வளர்ப்பு நாய்கள், சிறுவர்களை விரட்டி விரட்டி கடிப்பதாக, அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நாய்களை வீட்டிலேயே கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், தெருவில் சுற்றும் வளர்ப்பு நாய்கள், சிறுவர்களை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ஆறுமுகம் தட்டிக் கேட்டதால், நாய்களின் உரிமையாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட ஆறுமுகம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.