சொந்த ஊருக்கு வந்த பூவராக பெருமாளுக்கு உற்சாக வரவேற்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூவராகப் பெருமாள், மாசி மக உற்சவத்தை முன்னிட்டு
200க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து, தனது சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணத்தை வந்தடைந்தார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி யானை, குதிரை ஆட்டம், வாண வேடிக்கை, மங்கள வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக் கணக்கான மக்கள், பூவராகப் பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர்.
Next Story
