பள்ளி பேருந்தை கடத்தி ஏடா கூடமாக ரைடு போன கயவன்.. தடுத்த காவலருக்கு அடி.. ஒருவர் பலி

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் தனியார் பள்ளியின் பேருந்தை கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் காவலர் சசிகுமார் பேருந்தை மடக்கி சாமுவேலை பிடித்தபோது, சாமுவேல் காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து பேருந்துடன் சென்ற சாமுவேல் தாறுமாறாக ஓட்டிச் சென்றதில் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அசோக் குமார் என்ற கட்டட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்