அண்ணா நினைவிடம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றிய நபர்
சென்னை மெரினா கடற்கரை அருகே அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடம் இடையே பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்த நபரை பிடித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அந்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன் என்பது தெரியவந்தது. மேலும் இலங்கை தமிழர்கள் இறப்பிற்கு பழிவாங்க மண்ணெண்ணெய் பாட்டிலோடு வந்தாக தெரிவித்த அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல பேசியதால் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்...
Next Story
