பிரபல கடையில் பிரியாணி சாப்பிட்டவர் ஹாஸ்பிடலில் அனுமதி - சிக்கனோடு இருந்த அதிர்ச்சி
பிரியாணி கடை உணவில் பூச்சி...ஒருவர் பாதிப்பு...அதிகாரிகள் விசாரணை
காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியை சேர்ந்த சூரியராஜன் என்பவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று, காஞ்சிபுரம் காமராஜர் வீதியிலுள்ள பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளார். சூரியராஜனின் அண்ணன் சாப்பிட்ட உணவில் வண்டு போன்ற ஒரு பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சூரியராஜன் உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story
