தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர் - பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர் - பரபரப்பு
Summary

சென்னை தலைமைச் செயலகம் நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசன்.

இவரிடம், வீடு கட்டுவதற்காக லோன் வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என எழிலரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தலைமைச் செயலகம் வந்த எழிலரசன் நுழைவு வாயில் அருகே அவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com