"பட்டா நிலங்களில் அனுமதி.." அமைச்சர் நாசர் அதிரடி அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார், பட்டா நிலங்களில் விதிகளுக்கு உட்பட்டு வழிபாட்டு தலங்கள் அமைக்க சிலர் பிரச்சனைகளை உருவாக்குவதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நாசர், பட்டா நிலங்களில் விதிகளுக்கு உட்பட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, விண்ணப்பித்து அனுமதி பெற்று வழிபாட்டு தலங்களை அமைக்கலாம் என்று கூறினார். இதற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாசர் தெரிவித்தார்.
Next Story
