"குளிக்கத் தடை"-"அடிவாரத்திலேயே சொல்லியிருக்கலாம்.." - சுற்றுலாப் பயணிகள் ஆவேசம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படாததால் வனத்துறை அலுவலரிடம் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். அந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், சிமெண்ட் கட்டை உடைந்துள்ளதாக கூறி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, பெங்களூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து, வனத்துறை அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலையடி வாரத்தில் இருக்கும் சோதனைச் சாவடியிலேயே கூறியிருந்தால், அங்கேயே திரும்பி சென்றிருப்போம் என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

X