கலெக்டர் ஆபீஸ் அருகே... பெரியார் சிலை அவமதிப்பு..? சேலத்தில் பரபரப்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலையின் மீது காலணி ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு சேலம் டவுன் போலீசார் வந்து காலணியை அப்புறப்படுத்தினர். சமூக விரோதிகள் சிலை மீது காலணியை வீசினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
