கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்வை மையமாக கொண்ட படம் ஆஸ்கர் விருது பெற்றதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து மெடல் கொடுத்து பாராட்டு தெரிவித்தார். 'ப்ரீயட் எண்ட் ஆப் செண்டண்ஸ்' என்ற ஆவண குறும்படம் 91 வது ஆஸ்கர் விழாவில் விருது பெற்றது. இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் அருணாச்சலம் முருகானந்தத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அருணாச்சலம் முருகானந்தத்துக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.