"பேரறிவாளன் விடுதலை - ஆளுநர் 3 நாட்களில் முடிவு"

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்,30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்இவர்களின் விடுதலை தொடர்பாக, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்யக் கோரி, பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவு செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு வாதிட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில், பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com