தமிழகத்தையே வாயடைக்க வைத்த `பெரம்பூர்’.. VIP தொகுதிலேயே `முதலிடம்’

VIP தொகுதிலேயே `முதலிடம்’

#tnelection2026 #perambur தமிழகத் தேர்தலின் நட்சத்திரத் தொகுதிகளாகக் கருதப்படும் விஐபிக்கள் களம் காணும் தொகுதிகளில் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. அந்த வகையில், கொளத்தூர் தொகுதியில் 86.11 சதவீதமும், சேப்பாக்கம் தொகுதியில் 84.34 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. எடப்பாடி தொகுதியில் 92.08 சதவீதமும், பெரம்பூர் தொகுதியில் 92.43 சதவீதமும் வாக்குகள் பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. திருச்சி கிழக்கு தொகுதியில் 81.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேனியின் போடிநாயக்கனூர் தொகுதியில் 82.83 சதவீதமும், சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் 74.81 சதவீதமும் வாக்குப்பதிவு எட்டப்பட்டுள்ளது. சாத்தூர் தொகுதியில் 85.74 சதவீதமும், விருத்தாசலத்தில் 86.20 சதவீதமும், தருமபுரியில் 89.44 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி தொகுதியில் 90.57 சதவீதமும், கோவை தெற்கு தொகுதியில் 82.14 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 90.74 சதவீதமும், விருதுநகரில் 82.77 சதவீதமும், கோவை வடக்கு தொகுதியில் 75.67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் 74.17 சதவீதமும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 87.54 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. திண்டுக்கல் தொகுதியில் சரியாக 86 சதவீதமும், சென்னையின் திரு.வி.க நகர் தொகுதியில் 78.70 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. லால்குடி தொகுதியில் 86.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com