Perambur Power Theft| பெரம்பூரில் 12 `மின் திருட்டுகள்’ கண்டுபிடிப்பு..

பெரம்பூரில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு -ரூ.12.44 லட்சம் அபராதம் சென்னை பெரம்பூர் பகுதியில் மின் வாரிய அதிகாரிகள் நடத்திய அதிரடி கூட்டு ஆய்வில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 12 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு 78 ஆயிரம் ரூபாய் சமரசத் தொகையைச் செலுத்தியதால் அவர்கள் மீதான போலீஸ் புகார் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், மின் திருட்டு தொடர்பான தகவல்களை கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com