பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.