அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள் - அடுத்த நொடியே பறந்த உத்தரவு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, முதல்வர் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், 556 பயனாளிகளுக்கு 3 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் நல்லறிக்கை கிராமத்தில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை மக்கள் திடீரென முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், அனைத்தும் சரிசெய்யப்படும் என மக்களிடம் உறுதியளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Next Story
