ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்
Published on

வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனம், கொளப்பாடி கிராமத்தில் தனது இரண்டாவது மகளான பச்சையம்மாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், பச்சையம்மாவை சந்திப்பதற்காக தனது மூத்த மகள் மற்றும் அவரது குழந்தை மற்றும் மகன் சக்திவேலுடன் தனம் சென்றுள்ளார். 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய போது, பச்சையம்மாவின் குழந்தையையும் தங்களுடன் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், புதுவேட்டக்குடி செல்லும் சாலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பரமேஸ்வரி, இரண்டு வயது குழந்தைகளான செந்நிலா, நந்திதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

X

Thanthi TV
www.thanthitv.com