நரிக்குறவர் சமுதாய மக்கள் சாலை மறியல் : புதிய குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நரிக்குறவர் சமுதாய மக்கள் சாலை மறியல் : புதிய குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை
Published on
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாட்சியர், 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால், அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com