"யார் போலி விவசாயி என மக்கள் அறிவார்கள்" முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்
யார் போலி விவசாயி என மக்கள் அறிவார்கள்- முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்
போலி விவசாயி என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்னை பற்றி
முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கிடப்பில் போட்டது, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது என குற்றம் சாட்டியுள்ளார். நான் உண்மையான விவசாயியா?, நீங்கள் உண்மையான விவசாயியா?
என்பதை மக்கள் நன்கறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள் என தெரிவித்துள்ளார்.
