வீட்டை காலி செய்து தமிழகம் வந்த நபர்கள்.. டெம்போவில் சோதனையிட்ட போலீசுக்கு காத்திருந்த ஷாக்
பெங்களூருவில் இருந்து வீட்டைக் காலி செய்வது போல், நூதன முறையில் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை கடத்திக் கொண்டு வந்த இரண்டு பேரை ஓசூர் அருகே போலீசார் கைது செய்தனர். ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், பெங்களூரில் இருந்து வந்த டெம்போ வகானத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த டெம்போவில் வீட்டை காலி செய்வது போல் பீரோ, மெத்தை உள்ளிட்ட பொருட்களை வைத்து, பீரோவுக்குள் மூட்டை மூட்டையாக பான் மசாலா, குட்காவை மறைத்துக் கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, குட்காவை கடத்தி வந்த மலையரசன், சரவணகுமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், 710 கிலோ குட்கா பொருட்கள், டெம்போ வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
