சிறப்புமிக்க தீர்ப்பு.. தந்தி டிவி செய்தியுடன் போஸ்டர் ஒட்டி வரவேற்ற மக்கள்

x

நீதிமன்ற தீர்ப்பு - தந்தி டிவி செய்தியுடன் போஸ்டர் ஒட்டி மக்கள் வரவேற்பு

திருநெல்வேலியில் அகஸ்தியர் அருவிக்கு கட்டண வசூல் ரத்து தொடர்பாக தந்தி டிவியில் வெளியான செய்தியுடன் நெல்லை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பொது மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே அகஸ்தியர் அருவிக்கு செல்ல உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில், தீர்ப்பு செய்தி மற்றும் அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா படத்துடன் தீர்ப்பை வரவேற்று நெல்லை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்