தாமிரபரணி ஆற்றில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்பு

x

நெல்லை மாவட்டம் அம்பையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், ஆற்றில் சிக்கியவர்களை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஆற்றில் குளிப்பதற்காகவும், துணி துவைப்பதற்காகவும் வந்த சுமார் 20 பேர், கரைக்கு வர முடியாமல் பாறையின் மீது ஏறி நின்றனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஆற்றில் சிக்கியிருந்த 20 பேரையும் கயிறு கட்டி கரைக்கு அழைத்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்