Festival | Bus | கோயிலுக்கு செல்ல சாரை சாரையாக குவிந்த மக்கள்.. பேருந்து தட்டுப்பாடால் பயணிகள் அவதி
கோயிலுக்கு செல்ல சாரை சாரையாக குவிந்த மக்கள்.. பேருந்து தட்டுப்பாடால் பயணிகள் அவதி
#ariyalur #bus #temple #festival #police #thanthitv
அரியலூரில் பேருந்து தட்டுப்பாடு - பயணிகள் அவதி அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில், சிறப்பு பேருந்துகள் கோவில் வழித்தடத்தில் இயக்கப்பட்டதால், தரிசனம் முடித்து சொந்த ஊர் திரும்ப வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கைக்குழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் என பலரும் பேருந்தில் முண்டியடித்து ஏற முயன்றனர். இந்நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
