காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் - ஈரோட்டில் பரபரப்பு

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, புகார்தாரரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட வருவாய் துறையினரின் முன்னிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் புகார்தாரருக்கிடையே மோதல் ஏற்பட்டு, புகார்தாரர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்