சென்னையில் திடீரென அரசு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய மக்கள் - அதிர்ச்சி காரணம்

x

சென்னையில் தவறான பாதையில் வந்து பைக்கின் மீது மோதிவிட்டதாக கூறி, கற்களை வீசி அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு அரசு பேருந்து, பெரும்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, போர் நினைவு சின்னம் பகுதியில் ரவுண்டானாவில் திரும்பும் போது, பைக்கில் வந்த ஒரு இளைஞர் மீது பேருந்து மோதியதாக தெரிகிறது. இதில், பேருந்தும் - பைக்கில் சென்ற இளைஞரும் தவறான பாதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தோஷ் என்ற அந்த இளைஞர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த சத்யா நகர் குடியிருப்புவாசிகள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்