ஒருமையில் பேசிய தாசில்தாரை அலறவிட்ட மக்கள்
சிவகங்கை அருகே உள்ள பனங்காடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' முகாமில் மனு அளிக்க வந்த பொதுமக்களை மரியாதை குறைவாக ஒருமையில் பேசிய அரசு அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமிற்கு வந்திருந்த சிவகங்கையை சேர்ந்த சேது என்பவரும், சமத்துவப்புரத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரும் அளித்த மனுக்களைப் பெற்றும், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் கையிலேயே வைத்திருந்ததாக தெரியவருகிறது. இதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, தாசில்தார் பாலகுரு உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்களை ஒருமையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், 2 தரப்பினரும் மாறி மாறி வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
