கற்களை வைத்து மலைக்குன்றின் மீது இடம் பிடித்த மக்கள் | ஷாக்கான அதிகாரிகள்
அரசு இடத்தில் வீடு கட்ட முயன்ற தனிநபர் - பொதுமக்கள் நூதன போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட முயன்ற தனிநபரை கண்டித்து, தங்களுக்கும் இடம் வேண்டுமென கூறி கற்களை வைத்து இடம் பிடித்த பொதுமக்களால் அதிகாரிகள் திகைத்து நின்றனர். வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர், காளியம்மன் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான மலைக்குன்று உள்ளது. இந்நிலையில், வேறொரு பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் தன்னிடம் பட்டா உள்ளது என கூறி வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இதனால், அப்பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்து வரும் மக்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கற்களை உடைத்து மலைக்குன்றின் மீது இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
