தேனி - மதுரை மாவட்டங்களை இணைக்கும் மலைப்பாதை-60 ஆண்டுகால பாதைக்காக மக்கள் வைக்கும் கோரிக்கை
தேனி மதுரை மாவட்டங்களை இணைக்கும் வகையில் மயிலாடும்பாறை மல்லபுரம் மலைச்சாலை திட்டம் அமைந்துள்ளது
60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் இந்த வழித்தடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் சாலை அமைக்கப்பட்டது
சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த மலைச்சாலையில் நான்கு கிலோ மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை போடப்பட்டு உள்ளது.
இந்தச் சாலை ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அளவில் மிகவும் குறுகலான முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் இன்று வரையில் இந்த சாலையில் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது
ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சென்றுவரும் இந்த மலைச்சாலையை அகலப்படுத்தி இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என்பது இப்போது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது
இந்த மலைச்சாலையை அகலப்படுத்த பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் திட்டம் கனவாகவே உள்ளது
மேலும் இந்தச் சாலை தற்போது சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ள போதும் இரண்டு மாவட்ட மக்களும் தூரமும், நேரமும் குறைவு என்பதால் அபாயம் முறையில் பயணம் செய்து வருகின்றனர்.People have demanded that the Mayiladumbarai-Mallapuram mountain road connecting Theni and Madurai districts be widened.
இரண்டு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான இந்த மலைச்சாலை திட்டத்தை மேம்படுத்தி அரசு பஸ் வசதி செய்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது
