முதல்வரை வரவேற்க வைத்திருந்த கரும்பு, வாழைகளை அள்ளி சென்ற மக்கள்
திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வந்த முதல்வரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் கட்டப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி எஎல்ஏ செல்வராஜின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்த கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கரும்பு மற்றும் வாழை மரங்கள் வழிநெடுகளும் கட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு சென்ற பிறகு, அங்கு கட்டப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைகளை பொதுமக்கள் போட்டியிட்டு அள்ளி சென்றனர்.
Next Story
