காணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.
காணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்
Published on

குழந்தைகளுடன் குடும்பமாக வந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். கடலுக்குள் யாரும் செல்லாதவாறு 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப் படை காவலர்கள் கடற்கரையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். காணும் பொங்கலை ஒட்டி, கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. உயர் கோபுரங்களை அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com