மெரினாவில் இரவு `குல்பி ஐஸ்' வாங்க குவிந்த மக்களால் பரபரப்பு..
சென்னை மெரினா கடற்கரைக்கு இரவில் குல்பி ஐஸ் வாங்க குவிந்த பொதுமக்களால் சலசலப்பு ஏற்பட்டது. குல்பி ஐஸ் வாங்குவதற்காக இரவு காரில் பெண்ணுடன் வந்த நபர், காரினை பார்க்கிங் செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த போலீசார், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது சிலர் ஆபாசமாக பேசியது முகம் சுளிக்கும் படி இருந்தது.
Next Story
