

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுந்தரவேல், கடந்த 25 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நிலையில், தொற்று பரிசோதனை செய்து கொண்டு தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தலில் இருந்தார். இந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.