அசுத்தமான குடிநீருடன் முறையிட்ட மக்கள் - பாட்டிலை பிடுங்கி வீசிய MLA
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வந்த பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட எம்எல்ஏவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
தாதம்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக சேரும், சகதியமாக குடிநீர் வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தெரிகிறது. இந்நிலையில் தாதம்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வந்த நிலையில், கலங்கிய நீரை பாட்டிலில் கொண்டு வந்து பொதுமக்கள் முறையிட்டனர். முதலில், பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த எம்எல்ஏ, திடீரென ஆக்ரோஷமாக தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எரிந்ததால், பொதுமக்கள்அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்ட முயன்ற எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
