கண்ணீருடன் கலெக்டரை பார்க்க வந்த மக்கள்

x

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் 10 மீனவர்களுக்கும் தலா 1.46 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அபராத தொகையை ரத்து செய்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்